Friday, August 17, 2012

இன்னும் என்ன தோழா


innum enna thozha song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ஏழாம் அறிவு

இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள் :  பல்ராம்நரேஷ் அய்யர்சுசித் சுரேசன்

பாடலாசிரியர் : கவிஞர் பா. விஜய்

வருடம் : 2011


இன்னும்  என்ன  தோழா
எத்தனையோ  நாளா
நம்மை  இங்கு  நாமே  தொலைதோமே 
நம்ப  முடியாதா 
நம்மால்  முடியாதா 
நாளை  வெல்லும்  நாளை செய்வோமே 
யாரும்  இல்லை  தடைபோட  
உன்னைமெல்ல  எடைபோட 
நம்பிக்கையில்  நடைபோட  சம்மதமே 
என்ன  இல்லை உன்னோடு  
ஏக்கம்  என்ன கண்ணோடு 
வெற்றி  என்றும்  வலியோடு  பிறந்திடுமே 

வந்தால்  
அலையாய்  வருவோம் 
வீழ்ந்தால் 
விதையாய் விழ்வோம் 
மீண்டும்  மீண்டும் எழுவோம்
எழுவோம் 
இன்னும் இன்னும் இறுக 
உள்ளே  உயிரும்  உருக 
இளமை  படையே  வருக 
எழுக 

இன்னும்  என்ன  தோழா 
எத்தனையோ  நாளா
நம்மை  இங்கு  நாமே  தொலைதோமே 
நம்ப  முடியாதா 
நம்மால்  முடியாதா 
நாளை  வெல்லும்  நாளை செய்வோமே 

மனம்  நினைத்தால்   
அதை  தினம்  நினைத்தால் 
நெஞ்சம்  நினைத்ததை  முடிக்கலாம் 
தொடுவானம்  இனி  தொடும்  தூரம் 
பல  கைகள்  சேர்க்கலாம் 
விதை  விதைத்தல் 
நெல்லை  விதை விதைத்தல் 
அதில்  கள்ளி  பூ  முளைக்குமா ?
தலைமுறைகள்  நூறு  கடந்தாலும் 
தந்த  வீரங்கள்  மறக்கும ?
ஒரே  மனம் 
ஒரே குணம் 
ஒரே தடம்  எதிர்  காலத்தில் 
அதே  பலம்   
அதே திடம் 
அகம்  புறம்  நம்  தேகத்தில் 

கழுத்தொடும்  ஒரு  ஆயுதத்தை  
தினம் களங்களில்  சுமக்கிறோம் 
எழுத்தோடும்  ஒரு ஆயுதத்தை
எங்கள்  மொழியினில்  சுவைக்கிறோம் 
பனிமூட்டம்  வந்து  படிந்தென்ன 
சுடும்  பகலவன்  மறையுமா?
அந்த  பகைமூட்டம் வந்து  பணியாமல்  
எங்கள் இருவிழி உறங்குமா?
இதோ  இதோ இணைத்தோ 
இனம்  இனம் நம் கையேடு 
அதோ  அதோ தெரிந்ததோ 
இடம்  இடம் கண்ணோடு 


யாரும்  இல்லை  தடைபோட  
உன்னைமெல்ல  எடைபோட 
நம்பிக்கையில்  நடைபோட  சம்மதமே 
என்ன  இல்லை உன்னோடு  
ஏக்கம்  என்ன கண்ணோடு 
வெற்றி  என்றும்  வலியோடு  பிறந்திடுமே 

வந்தால்  
அலையாய்  வருவோம் 
வீழ்ந்தால் 
விதையாய் விழ்வோம் 
மீண்டும்  மீண்டும் எழுவோம்  
எழுவோம் 
இன்னும் இன்னும் இறுக 
உள்ளே  உயிரும்  உருக 
இளமை  படையே  வருக 
எழுக



No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்