பாடல் பற்றிய விவரங்கள்
படம் : பாம்பே
இசைஅமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன், ஸ்வர்ணலதா, ஜி. வி. பிரகாஷ் குமார், சாரதா
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதிசனம் தூங்கையில சாமக்கோழி கூவையில
குச்சி குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா
(குச்சி..)
குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சி பேச பொன்னு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
குச்சி குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா
காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
அரசன் மகனுக்கு வால் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே
பொம்பலைக்கு கிளி பிடிக்கும்
அல்லும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
ஏ பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டு விடு
அ அ அ பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எறியவிட்டு வெட்கத்தை அணைத்துவிடு
(குச்சி..)
சிறகு நீங்கினால் பறவையில்லை
திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்ல
உனக்கிது புரியவில்லை
உடலை நீங்கினால் உயிருமில்லை
ஒளியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நான் இல்லை
உனக்கிது தெரியவில்லை
பூமி சுற்றுவது நின்றூவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்
என்னாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தினில் ஒதுங்கி நில்லு
(குச்சி..)
Portekiz yurtdışı kargo
ReplyDeleteRomanya yurtdışı kargo
Slovakya yurtdışı kargo
Slovenya yurtdışı kargo
İngiltere yurtdışı kargo
XDXSU
Angila yurtdışı kargo
ReplyDeleteAndora yurtdışı kargo
Arnavutluk yurtdışı kargo
Arjantin yurtdışı kargo
Antigua ve Barbuda yurtdışı kargo
İFVG