Sunday, September 2, 2012

யாரது...யாரது யாரது...


yaradhu song lyrics in tamil

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : காவலன்

இசைஅமைப்பாளர் : வித்யாசாகர்

பாடியவர்கள் : கார்த்திக்சுசித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் யுகபாரதி

வருடம் : 2010

யாரது...யாரது யாரது...
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது...யாரது யாரது...யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது...யாரது யாரது...யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
யாரது...யாரது யாரது...யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

2 comments:

  1. படத்திலே இந்த பாடல் மிகவும் ஹிட்...

    நல்ல வரிகள்... பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் இத்தளத்தினை பகிரவும்.

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்