பாடல் பற்றிய விவரங்கள்
படம் : பாம்பே
இசைஅமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடியவர்கள் : சுஜாதா, கோரஸ்
பாடலாசிரியர் : கவிஞர்.வைரமுத்து
வருடம் : 1995
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் -
தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் -
தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்
வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை மனதோடு மனம் சேரட்டும்
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் -
தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்
புவியெல்லாம்கை கோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
புகை எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒழி சேரட்டும்
No comments:
Post a Comment
அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்