Monday, February 25, 2013

ஆடலுடன் பாடலை கேட்டு - குடியிருந்த கோயில்

adaludan padalai lyrics ஆடலுடன் பாடலை வரிகள்

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : குடியிருந்த கோயில்

இசைஅமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடியவர்கள் : பி சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்

பாடலாசிரியர் : கவிஞர் வாலி

வருடம் : 1968

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
உரியவன் நீ தானே

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு


விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்