Sunday, March 17, 2013

எனக்கென ஏற்கனவே - பார்த்தேன் ரசித்தேன்

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ.jpg
பார்த்தேன் ரசித்தேன்
பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பார்த்தேன் ரசித்தேன்

இசைஅமைப்பாளர் : பரத்வாஜ்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரிணி

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 2000

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி


ஓரப் பார்வை பார்க்கும் போதே
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது
எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசையும் மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி

வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை..

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி


என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி


ஓரப் பார்வை  பார்க்கும் போதே
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்