Sunday, November 4, 2012

சலங்கையிட்டாள் ஒரு மாது


சலங்கையிட்டாள் ஒரு மாது.jpg

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : மைதிலி என்னை காதலி

இசைஅமைப்பாளர் : டிராஜேந்தர்


பாடலாசிரியர் : டிராஜேந்தர்

வருடம் : 1986

ஒரு பொன் மானை நான் காண தகதிமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமித்தோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமித்தோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்

தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாரி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்

ஜதி என்னும் மழையினிலே ரதியிவள் நனைந்திடவே
அதில் பரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டாள் ஒரு மாது

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலைனிலா மேனியிலே சுளைபலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டாள் ஒரு மாது

6 comments:

  1. அருமையான பாடல்... மறக்க முடியாத பாடல்...

    பாடல் வரிகளுக்கு நன்றி...

    ReplyDelete
  2. மிக அருமையான பாட்டு. பெண்ணின் கண்கள், கன்னம், பின்னழகை வர்ணிக்க இந்த பாட்டை விட சிறந்த உவமையை எந்த கவிஞனாலும் சொல்ல முடியாது. வாழ்த்துகள் ராஜேந்தர் சார்.

    ReplyDelete
  3. மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம்...
    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
    கலைனிலா மேனியிலே சுளைபலா சுவையை கண்டேன்....
    பெண்ணை வர்ணித்து பெரும் போதை ஏற்றி விட்ட கவிஞன்.டி.ராஜேந்தர்

    ReplyDelete
  4. அவள் விழிகளில் பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம். பாடல்கள் முழுவதும் விரசம்.

    ReplyDelete
  5. காதலில் தோற்றவனுக்கும் ஜெயித்தவனுக்கும் இது சரணம்!

    ReplyDelete
  6. ஒரு அழகிய மங்கையை விபரிக்க TR அவர்களின் உவமை மற்றும் உருவக அணிகளின் பிரயோகம் அவரின் தமிழ் அறிவின் ஆழத்தை காட்டுகிறது. அணியிலக்கணத்துக்கே அழகு சேர்க்கும் ஒரு அற்புத மேதை.

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்