படம் : பிரியமுடன்
இசை : தேவா
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
கவிஞர் : அறிவுமதி
வருடம்: 1998
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா....
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர் காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
ஐயையோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கி தந்தாளே
ஹே... கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பெயரைக் கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக் கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நீ நில்லு
வெண்ணிலாவின் காதில் போய்ச் சொல்லு
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா....
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...
புன்னகைக்கு நீயே தேசமடி
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர் காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
Tamil all movie songs lyrics click herelyricstamilan
ReplyDeleteஇந்த பாடலின் ஆசிரியர் அறிவுமதி கிடையாது.
ReplyDelete