Monday, November 12, 2012

ஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்


ஆராரிராரோ நான் இங்கு பாட.jpg

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ராம்

இசைஅமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்

பாடலாசிரியர் : கவிஞர் சிநேகன்

வருடம் : 2005

ஆராரிராரோ நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு 
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து 



வாழும் காலம் யாவுமே.. 
தாயின் பாதம் சொர்க்கமே 
வேதம் நான்கு சொன்னதே... 
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே .. 
அகிலம் யாவும் ஆள்கிறதே 



ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து



வேர் இல்லாத மரம் போல் 
என்னை நீ பூமியில் நட்டாயே..
ஊரு கண் எந்தன் மேல் பட்டால் 
உன் உயிர் நோக துடித்தாயே 
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் 
நீ சொல்லி தந்தாயே 
பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில் 
வழி நடத்தி சென்றாயே 
உனக்கே ஓர் தொட்டில் கட்டி .. 
நானே.... தாயாய் மாறிட வேண்டும் 



ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண் உறங்கு 
என்னோட மடி சாய்ந்து 



தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் 
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா 
மண் பொன் மேல் ஆசை துறந்த 
கண் தூங்காத உயிர் அல்லவா 
காலத்தின் கணக்குகளில் செலவாகும் 
வரவும் நீ...... 
சுழல்கின்ற பூமியில் மேலே சுழறாத 
பூமி நீ......... 
இறைவா நீ ஆணையிடு 
தாயே நீ எந்தன் மகளாய் மாற........ 



ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண் உறங்கு 
என்னோட மடி சாய்ந்து

21 comments:

  1. நல்ல பாடல்... பாடல் வரிகளுக்கு நன்றி...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Thanks for ur wishe, and sorry for belated deepavali wishes, I hope U enjoyed the Deepavali.

    ReplyDelete
  3. நல்ல வரிகள்

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்