Showing posts with label எம். எஸ். வி. Show all posts
Showing posts with label எம். எஸ். வி. Show all posts

Thursday, May 15, 2014

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் - உலகம் சுற்றும் வாலிபன்

ulagam sutrum valiban songs lyrics

படம் : உலகம் சுற்றும் வாலிபன்

இசைஅமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்

பாடலாசிரியர் : புலவர் வேதா

வருடம் : 1973

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

Wednesday, February 6, 2013

பரமசிவன் கழுத்தில் இருந்து - பாடல்

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : சூரியகாந்தி

இசைஅமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன்

பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்

வருடம் : 1973

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது