Showing posts with label சுஜாதா பாடல்கள். Show all posts
Showing posts with label சுஜாதா பாடல்கள். Show all posts

Wednesday, October 10, 2012

பூவே உனக்காக - சொல்லாமலே



sollamale song lyrics.jpg

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பூவே உனக்காக

இசைஅமைப்பாளர் : எஸ்.. ராஜ்குமார்

பாடியவர்கள் : சுஜாதா, பி.ஜெயசந்திரன்

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது (2)

மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டிணங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே நீ முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
உன்னோடுதான்….
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பணங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் என்னாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே யார் பார்த்தது