Showing posts with label சித்ரா பாடல்கள். Show all posts
Showing posts with label சித்ரா பாடல்கள். Show all posts

Saturday, May 11, 2013

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக

Anantham Anatham Padum (Chitra) From Poove Unakkaga.jpg


பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பூவே உனக்காக

இசைஅமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள் : சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

வருடம் : 1996


ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

உன்னை பார்த்த நாளில் தான் கண்ணில் பார்வை தோன்றியது
உந்தன் பேரை சொல்லி தான் எந்தன் பாஷை தோன்றியது
உன்னை மூடி வைக்கத்தான் கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னை சூடி பார்க்கத்தான் பூக்கள் மாலை ஆகியது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம் வாசல் வந்து சேர்ந்ததே 



ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது
எங்கெங்கோ தேடிய வாழ்வை உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை சங்கீதம் ஆனது இங்கே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

Friday, September 28, 2012

ருக்கு மணி - ரோஜா



rukkumani rukkumani.jpg

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : ரோஜா

இசைஅமைப்பாளர் : .ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1992

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

கட்டி கொண்ட ஆணும் பெண்னும்
தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒன்னு விட்டு விட்டு
மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம
தீராது இந்த சத்தம்

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

சின்னஞ்சிறு பொண்ணுக்கு
ஆசை ரொம்ப இருக்கு

சீனிக்குள்ள எறும்பு
மாட்டிக்கிட்டு கணக்கு

எட்டு மேல எட்டு வச்சு
கட்டில் வரை நெருங்க

முத்து மணி கொலுசுங்க
முத்தம் கேட்டு சிணுங்க

உள்ள பூ பூக்குது
அடி உச்சி ஏன் வேர்க்குது

ஆசை பாய் போட்டது
அட அச்சம் தாழ் போட்டது

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

சொந்தம் கொண்ட புருஷன்
சுண்டு விரல் பிடிக்க

சுண்டு விரல் தொட்டதும்
அந்த இடம் சிலிர்க்க

காமதேவன் மண்டபத்தில்
கச்சேரியும் நடக்க

கன்னிமகள் வளையலும்
பின்னணிகள் இசைக்க

முத்தம் பந்தாடுது
உயிர் மொத்தம் திண்டாடுது

சித்தம் சூடேருது
இந்த ஜென்மம் ஈடேருது

ருக்கு மணி ருக்கு மணி
அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி
கண்டு பிடி என்ன சத்தம்

Friday, August 10, 2012

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு


uyire uyire vandhu song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  ஹரிஹரன்கே. எஸ். சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1995


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு 
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு 

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் 
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்